இந்தியாவில் ஆணாக மாறிய முதல் பெண் அரச அதிகாரி: நிதி அமைச்சு அனுமதி
இந்தியாவில் வருவாய் சேவை (IRS) அதிகாரியாக பணியாற்றிய பெண் ஒருவர் ஆணாக மாறியுள்ளார்.
இதன்படி, இந்திய சிவில் சேவையில் பாலின மாற்றத்தின் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஹைதராபாத்தில் உள்ள சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) பிராந்திய பெஞ்சில் இணை ஆணையராக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு தனது பாலினத்தை மாற்றியுள்ளார்.
இதன்படி, எம்.அனுசுயா என்ற தனது பெயரை எம்.அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாகவும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இதன்படி, அதிகாரி அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் ‘எம் அனுகதிர் சூர்யா’ என்று அங்கீகரிக்கப்படுவார்” என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனுகதிர் 2013 இல் உதவி ஆணையராக தனது பணியைத் தொடங்கினார்.
செஸ்டாட்டின் தலைமை ஆணையர் (அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி) அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட 35 வயதான அதிகாரி, கடந்த ஆண்டு தனது தற்போதைய பதவியில் இணைந்துள்ளார்.
சூர்யா டிசம்பர் 2013 இல் சென்னையில் உதவி ஆணையராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 2018 இல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
அவர் 2023ஆம் ஆண்டு போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் ஆகியவற்றில் டிப்ளமோ கல்வியை முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()