கண்ணீரால் பாத்திரத்தை நிரப்ப கூறி சிறுமிக்கு தண்டனை
சீனா நகரில் மூன்று வயதுடைய அவரது மகளுக்கு வழங்கிய வினோதமான தண்டனை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறித்த சிறுமி பெற்றோர் கூறுவதை கேட்காது தொடர்ந்து பல மணிநேரங்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே செலவிட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த தந்தை சிறுமியை கண்டிக்கும் விதமாக தண்டித்ததுடன் கண்ணாடி பாத்திரத்தை கையில் கொடுத்து அதை கண்ணீரால் நிரப்பும் படி கட்டளை இட்டுள்ளார்.
அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பமே எனவும் சிறுவர்களை இவ்வாறு நடத்துவதானது சிறுவர் துஸ்பிரயோகங்களில் இடங்கும் என சமூக வலைத்தளங்களில் பலர் தற்போது விமர்சித்துள்ளனர்.
அந்நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தின் யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சில ஊடகங்கள் அன்று என்ன நடந்தது என்பது தொடர்பிலும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், இரவு உணவு தயாரிப்பின் போது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பிடுவதற்காக சாப்பாட்டு மேசைக்கு அழைத்துள்ளார். ஆனால், ஜியாவோ தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ்கி இருந்ததால் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த தந்தை, தொலைக்காட்சியை அணைத்து, ஜியாவை அழத் தூண்டினார். பிறகு ஒரு வெற்று கண்ணாடி பாத்திரத்தை அவளிடம் கொடுத்து அழ சொல்லியிருக்கின்றார்.
ஜியாஜியா தனது கண்களுக்குக் கீழே வைத்திருக்கும் பாத்திரத்தில் கண்ணீரை சேகரிக்க முயன்றதைக் காண முடிந்தது, அவரது தந்தையின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க முயன்றது குறித்த காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அது வைரலாகியும் வருகின்றது.
வைரலான காணொளி காரணமாக சிறு குழந்தைக்கு எதிரான தந்தையின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
![]()