இந்தியா
பிஹாரில் 15 நாளில் 7 பாலங்கள் இடிந்தன
பிஹார் மாநிலத்தின் சிவன் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் நேற்று காலை இடிந்தது. பல கிராமங்களை இணைக்கும் இந்தப் பாலம் கடந்த 1982-83-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அங்கு பழுது பார்க்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்தப் பாலம் நேற்று காலை 5 மணியளவில் இடிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சிவன் மாவட்டத்தில் டரோண்டா பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பாலம் இடிந்தது. இதேபோல் பிஹாரின் மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான், கிசான்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள் சமீபத்தில் இடிந்தன. 15 நாளில் 7 பாலங்கள்இடிந்ததால், இதுகுறித்து ஆய்வு நடத்த உயர்நிலைக் குழுவை பிஹார் அரசு அமைத்துள்ளது.