முச்சந்தி

சட்ட விரோத துப்பாக்கி வழக்கு .. உக்ரேன் அரசுடன் ஊழல் குற்றச்சாட்டு .. ஹண்டர் பைடனுக்கு சிறை தண்டனை? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபரின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னரும் உக்ரேனிய அரசுடன் ஊழல் மூடி மறைப்புக்கும், உக்ரேனிய வணிக உடன்பாடு ஊழலுடன் ஹண்டர் பைடனுக்கு குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
சட்ட விரோத துப்பாக்கி வழக்கு:
சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் (Hunter Biden) குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் ஜூன் 12இல் வாஷிங்டனில் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில், துப்பாக்கி வாங்க 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக கடைகளில் சென்று வாங்கலாம். இதற்காக ஒரு விண்ணப்பத்தை அவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்டவைகள் இருக்கும். இந்நிலையில், ஹண்டர் பைடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கடைக்கு சென்று துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார்.
துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று 54 வயது ஹன்டர் பொய் சொன்னதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு, அவர் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாட்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் தெரிவித்தது. போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட 3 வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் :
2016 இல் அமெரிக்க ஜனாதிபதி் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின் உக்ரேனிய நிறுவனத்துடனான ஊழலை விசாரித்து வந்த அதன் உயர்மட்ட வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்யுமாறு அன்றைய உக்ரைன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.
இதன்பின் 2016 ஆம் ஆண்டில், ஜோ பிடன் மகன் ஹண்டர் பைடனின் உக்ரேனிய வழக்கறிஞர் விக்டர் ஷோகினை பணிநீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார். ஹண்டர் பைடனின் உக்ரேனிய ‘புரிஸ்மா’ மற்றும் பிற நிறுவனங்கள் ஊழல் விசாரணையில் தற்போதும் உள்ளன. இருப்பினும், மற்ற மேற்கத்திய தலைவர்கள் மற்றும் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய அமைப்புகளும், ஊழலைச் சமாளிப்பதில் அவர் போதுமான அளவு செயல்படவில்லை என்று நம்பியதால், வழக்குரைஞரை பணிநீக்கம் செய்ய விரும்பினர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மகன் ஹண்டர் பைடன், உக்ரேனில் அவர் மேற்கொண்ட சில வணிகப் பரிவர்த்தனைகள் உட்பட, அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, அவரது நிதி தொடர்பாக நீதித்துறையால் 2020இல் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
உக்ரேனிய வணிக உடன்பாடு :
ஆயினும் பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீனா மற்றும் உக்ரைன் தொடர்பில் அவரும் அவரது தந்தையும் குற்றம் சாட்டப்பட்டனர். அதை அவர்கள் இருவரும் மறுத்தனர்.
உக்ரேனிய எரிசக்தி நிறுவனமான புரிஸ்மாவின் ஆலோசகர், ஜோ பிடனைச் சந்திக்க அழைத்ததற்கு நன்றி தெரிவித்ததாகக் கூறப்படும் மின்னஞ்சலில் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதற்கு, ஜோ பிடன் ஒரு நிருபரிடம் இது ஒரு “ஸ்மியர் பிரச்சாரம்” (Smear Campaign) என்று கூறி தப்பிக் கொண்டார். பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும், ஊழல் மூடி மறைப்பும் பாரியளவில் ஊடகங்களில் கசிந்தது.
25 ஆண்டுகள் சிறை தண்டனை:
தற்போது இவருக்கு எதிரான முதல் 2 வழக்குகளில் தலா 10 ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் மகன் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி (Illegal Buying a Gun) வாங்கியது தொடர்பான மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அதிபரின் மகன் ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்யவுள்ளார். மேலும், அதிபர் ஜோ பைடன் குடும்பம் பாரிய கலக்கத்தில் அதிர்ந்து போயுள்ளத.
அதே வேளை முன்னாள் அதிபர் டிரம்ப் கிரிமினல் குடும்பம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மகனாயினும் மன்னிப்பு இல்லை:
இந்நிலையில், அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் தனது மகன் வழக்கில், அவர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும், அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிபர் பைடன் மகனுக்கு எதிரான வழக்கின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் நீதிமன்ற நடைமுறையை மதிப்பதாகவும் கூறினார்.
மேலும், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது. ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நாட்டுக்கு அதிபராக இருந்தாலும் அவரும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று கூறினார். ஹன்டர் பைடன் ஒரு வழக்கறிஞர். பிரபல யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
தம் மகனுக்குத் தமது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு என்று அவர் சொன்னார். 2018ஆம் ஆண்டு கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார் எனவும் கூறினார்.
ஹண்டர் பைடனின் உக்ரேனிய தொடர்பு :
ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் இந்த உக்ரேனிய ஊழல் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன என்பதே உண்மை. ஏப்ரல் 2015 இல் இருந்து ஒரு மின்னஞ்சல் உக்ரேனிய புரிஸ்மாவின் ஆலோசகர் வாடிம் போஜார்ஸ்கி, வாஷிங்டனில் ஜே பெடனை சந்திக்க அழைத்ததில் இருந்து இந்த சர்ச்சை கிளம்பியது.
ஹண்டர் பைடன் உக்ரேனிய புரிஸ்மாவின் குழுவில் இயக்குநராக இருந்துள்ளார். புரிஸ்மா உக்ரைனுக்குச் சொந்தமான ஒரு தனியார் எரிசக்தி நிறுவனம். அதன் குழுவில் இருந்த பல வெளிநாட்டவர்களில் ஹண்டர் பைடன் ஒருவராக இருந்தார்.
உக்ரேனிய தொடர்பையும், வணிக ஊழலையும் ஜோ பிடனின் அரசு, நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட ஆய்வை “ரஷ்யாவின் பிரச்சார தகவல்” என்று கண்டித்துள்ளது, இருப்பினும் மின்னஞ்சல்கள் போலியானவை என்று அவர்கள் கூறவில்லை.
அப்போது நியூயார்க் போஸ்ட் கட்டுரையை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது கட்சி பகிர்ந்து கொண்டனர். அவரது முன்னாள் ஆலோசகர்களில் இருவர், ஸ்டீவ் பானன் மற்றும் ரூடி கியுலியானி, பகிரங்கமாக செய்தித்தாள்களுக்கு இக்கதை மற்றும் மின்னஞ்சல்கள் அடங்கிய ஹார்ட் டிரைவை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
பின்னர் 2019 டிசம்பரில் திரு கியுலியானி உக்ரேனிய தலைநகர் கிய்வ் நகருக்குச் சென்று,அங்கு அவர் உக்ரேனிய சட்டமியற்றுபவர் ஆண்ட்ரி டெர்காச்சை சந்தித்தார்.
திரு கியுலியானி உக்ரைனில் உள்ள ஜே பிடென்ஸ் மீது உள்ள ஊழல் தொடர்பை தோண்டி எடுக்க முயற்சித்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அன்றைய அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் தகவலின் படி உக்ரேனிய மின்னஞ்சல்களை மூடி மறைத்த விடயத்தை ஒப்புக் கொண்டார்.
அமெரிக்க ஊடகங்கள் மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மையை வெளியிட்டாலும், பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன என்பதே உண்மையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *