கவிதைகள்

“பயணங்கள் தனித்துப்போனது” …. கவிதை … முல்லை அமுதன்.

நேற்று
புகையிரதப் பயணத்தில்
நேர் எதிராக வந்தமர்ந்தவளின்
ஸ்நேகமான புன்னகை

மனதில் பூக்களை விதைத்தன
என்பது உண்மைதான்.
பூக்கள் செடியாகி பின் பூக்குமா
தெரியவில்லை.மறுநாளும் வந்தமர்ந்து,
உதிர்த்த சிரிப்பு கவிதைகளாகி
நெஞ்சில் பதிந்தன..

நாளை கவிதைகள் பூக்கலாம்.
பெயர்?…
நானும் சொல்ல..
அவளும் சொல்ல
பேச்சுகள்…
நாட்களாய் தொடர்ந்தன.
என்னைப் போலவே அவளுள்ளும்
பூத்திருக்கக்கூடும்…
எனக்கும் புரியவில்லை..

நான் பயணிக்கும் வண்டியிலேயே
பயணிப்பதும்,
எனக்காகவே வந்தமர்வதும்…
எப்படிச்சாத்தியமாகியது..?
இன்றெனப்பார்த்து மழை அதிகமாகப் பெய்தது.
அவளின் வந்தமர்ந்தவன்
சொன்னான்..

அடுத்த தரிப்பிலேயே இறங்கிச்சென்றுவிட்டான்.
கணவனால் இரவு கொல்லப்பட்டாள்.
பயணங்கள்
தனித்துப்போனது வெறுமையாய்.

முல்லை அமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.