சர்ச்சையைக் கிளப்பும் நைஜல் ஃபரேஜ்: சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்
உக்ரெய்ன் குறித்த நைஜல் ஃபரேஜின் கருத்து முற்றிலும் தவறானது என தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அவர் புடினின் கைகளில் விளையாடுவதாக கூறியுள்ளார்.
உக்ரெய்ன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் தூண்டுதலுக்கு மேற்கத்தேய நாடுகள் காரணம் என நைஜல் ஃபரேஜ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஃபரேஜ் நேரடியாக கருத்து தெரிவிக்காத நிலையில் உக்ரெய்னிய அரசாங்க ஆதாரம் பிபிசியிடம் “புடினிசத்தின் வைரஸ், துரதிர்ஷ்டவசமாக,மக்களை பாதிப்பதாக ரிஷி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவரான நைஜல் ஃபரேஜ், அடுத்த மாதம் 04ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாதி தரப்புக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கள் வெளியாகின.
நைஜல் ஃபரேஜ் இதற்கு முன்னர் ஏழு முறை போட்டியிட்ட போதிலும் ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஆனால் இந்த தேர்தலில் மிகப் பாரிய மாற்றம் ஏற்படும் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் பாலின அங்கீகாரம் குறித்த தனது தற்போதைய நிலைப்பாட்டை வைத்திருந்தால்,தொழிலாளர் கட்சியை ஆதரிப்பதற்குப் போராடுவேன் என எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் தெரிவித்துள்ளார்.
ரவுலிங்கின் கருத்துக்களுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், “பெண்கள் சமத்துவத்திற்கான கட்சி, பெண்களை முன்னிறுத்தி மையமாக வைக்கும் தேர்தல் அறிக்கை” என்று அந்த அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் என கூறப்படுகின்றது.
![]()