மஹிந்தவை சந்தித்த ஜெய்சங்கர்; ரணிலே வேட்பாளர் எனத் தெரிவித்தார்?

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கை அரசியலில் இந்தியாவின் செல்வாக்கையும் அதன் விருப்பத்தையும் வெளிப்டுத்தும் மறைமுக செய்தியாக உள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நபர் இந்தியாவுக்கு சாதகமானவராக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிவருபவர். அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக உள்ளது.

இதனை மஹிந்த ராஜபக்சவுக்கு தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் நோக்கமென சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுனவுக்கு ஒருதரப்பினர் குறிப்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினர் பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற அழுத்தங்கள் கட்சிக்குள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டுமென்ற செய்தியையே ஜெய்சங்கர் மஹிந்தவை சந்தித்ததன் ஊடாக தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button