இந்தியா

தமிழகத்தில் சோகம்; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலி

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிஐடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து இறந்தவர்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற சம்பவம் இரும்புக்கரம் கொண்டு தீர்க்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு பொலிஸார் என்னிட்ட ஒன்பது பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சட்டவிரோத கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 200 லீட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.