இந்தியா
ஜிசாட் – என் 2 செயற்கைக்கோள்: விரைவில் விண்ணில் செலுத்தப்படும்
அதி வேகமான இணைய சேவைக்காக ஜிசாட் – என் 2 (ஜிசாட்-20) என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக் கோள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் – 9 என்ற ரொக்கெட் மூலமாக விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இந்த செயற்கைக்கோள், 4700 கிலோ எடை கொண்டது. மேலம் 14 வருடங்கள் வரையில் ஆயுட்காலம் கொண்டது.
சுமார் 170 கிலோமீட்டர் தூரமும் 36000 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படவுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் எடை மிகவும் அதிகம் என்பதால் இதனை விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், இத் திட்டம் வெற்றியடைந்தார், 48 ஜிபி வேகத்தில் இணைய சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.