தமிழரின் பிரச்சினைக்கு புதிய முறையூடாகத் தீர்வு
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான பகிரங்க விவாதம் நல்ல விடயமென தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.)முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கட்சி தலைமையுடன் பேசி பங்கு கொள்வோமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கும் யாழ்.வணிகர் கழகத்துக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை யாழ்.நகரிலுள்ள வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் சுனில் ஹந்துன்நெத்தி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட சிலரும் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம்,வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் வி.நிறஞ்சன் உள்ளிட்டவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக் திக்குமிடையிலான சந்திப்பு ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது எதிர்த்தோம்.எனினும் 13 வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளதால் அதனை அமுல்படுத்த முடியும்.எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அணுகு முறை தேவையானது.இதற்காக செயற்படவுள்ளோம்.இது குறித்தான யோசனைகளை பெற்றுக் கொள்ளுமுகமாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றோம்.
யாழ்.வணிகர் கழகத்துடனான சந்திப்பின் பல விடயங்களை முன் வைத்தனர். தமிழ் மக்கள் இன,மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்திப்பில் நாட்டின் பொருளாதார நெருக்கடி,அரசியல் நிலைமை,ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசினோம்.இதன் போது வணிகர் கழத்தினர் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து யாழில் பகிரங்க விவாதம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கட்சிக்குள் பேசி பங்குகொள்வோம் என்றார்.
![]()