மன்னார் பரப்புக் கடந்தான் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! …
புலம்பெயர் மக்கள் உதவியுடன் கோவில் புனர்நிர்மாணம்!
மன்னார் மாவட்ட பரப்புக் கடந்தான் இந்துக்களும் கத்தோலிக்கர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் கிராமமாகும்.
இங்கு மிகவும் பிரபல்யமான கத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இந்துக்களின் இரண்டு வழிபாட்டுத் தளங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் காணப்படுகின்றது.

அவற்றில் ஒன்றான முத்துமாரி அம்மன் கோவில் தற்போது புணர் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கிராமத்தில் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் வந்து வருகின்றார்கள் அத்துடன் உயர்கல்வி கற்றவர்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையை மாற்றுவதற்காக புலம்பெயர் வாழ் மக்களின் உதவியுடன் இந்த கோவில் புனர்நிர்மாணமும் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு இரவு நேரத்தில் ஒளியூட்டப்பட்ட இடமாகவும் கணணி மற்றும் புத்தக வசதியுள்ள சிறிய வாசிகசாலையும் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()