1600 வருடங்கள் பழமைவாய்ந்த புத்தகம்; 5 மில்லியன் டொலருக்கு மேல் விலைபோனது!

உலகின் மிகவும் பழமையான புத்தகம் ஒன்று 5.1 மில்லியன் வெள்ளிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

அந்தப் புத்தகம், அக்காலத்தில் பாபிரஸ் என்ற ஒருவகை நாணல் செடிகளின் பசையில் தயாரிக்கப்பட்ட காகிதம் போன்ற பக்கங்களைக் கொண்டது. சுமார் 1600 வருடங்கள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது.

ஏலம் லண்டனில் ஜூன் 11ஆம் திகதி நடந்தது. விற்கப்பட்ட புத்தகம் தனிநபர் ஒருவர் தமது சேகரிப்பில் வைத்திருந்தார்.

கிராஸ்பை- சோயென் என்று அழைக்கப்படும் அந்த புத்தகத்தை நார்வேயைச் சேர்ந்த வர்த்தகரும் அரிய புத்தகங்களை சேகரிக்கும் மார்டின் சோயெனும் வைத்திருந்தனர்.

ஏலத்தின் ஆரம்பக்கட்ட விலை 3 மில்லியன் வெள்ளிக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஏலத்தில் இணையம் வழியாகவும் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

புத்தகத்தை பெயர் வெளியிடாத நபர் கைப்பேசி வாயிலாக வாங்கியதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button