பதவி விலகுவது குறித்து மனம் திறந்த பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுகக் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கோரியமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதன்பின்னரான கருத்துக் கணிப்புகளின் பின்னர் கன்சர்வேட்டிவ் பெரும் தோல்வியை சந்திக்கும் எனவும் கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றின் போது ரிஷி சுனக்கிடம் பதவி விலகுவது பற்றி யோசித்தீர்களாக என கேள்வியெழுப்பட்ட நிலையில் அவ்வாறான எதுவித தீர்மானமும் இல்லையென அவர் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் முன்னோக்கிச் செல்வதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.மக்களின் வாக்குகளுக்காக நான் போராடுவதை நிறுத்தப் போவதில்லை.

நம் நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுவதையும் நான் நிறுத்தப் போவதில்லை என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button