டென்மார்க் பிரதமர் மீது மர்ம நபர் தாக்குதல்!

தலைநகர் கோபன்ஹேகனில் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தாக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வெள்ளிக்கிழமை கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஒருவரால் தாக்கப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிகமாக எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *