பாதுகாப்பு வேலி முழுவதும் 100,000 உள்ளாடைகள்; விநோதத்தின் உச்சம் – காரணம் என்ன?
நியுசிலாந்தின் கார்டோனா பகுதியில் காணப்படும் இரும்பு வேலியொன்று பெண்களின் உள்ளாடைகளால் நிரம்பி வழிகின்றது. இதற்கு பல வரலாற்று கதைகள் இருந்தாலும் தற்போது அதில் காணப்படும் பல உள்ளாடைகள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் குறித்த செய்தி அப்பகுதி மாத்திரமன்றி உலகளவில் பிரபலமாகியுள்ளது. மேலும், அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அந்த பகுதியில் உள்ளாடைகளை விட்டு செல்வது மிகவும் விநோதமான முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
கார்டோனா நியூசிலாந்தின் மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி. பிரா வேலி காரணமாக இந்த பகுதி மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழற்றி வேலியில் தொங்கவிடுகின்றனர். பெண்கள் தங்களது உள்ளாடைகளை கழற்றி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்வது தற்போது வழக்கமாகவும் மாறியுள்ளது.

பின்னணி
1999ஆம் ஆண்டு அந்த இடத்தில் யாரோ 4 உள்ளாடைகளை அந்த இடத்தில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். ஆனால் அதை செய்தது யார் என்று யராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், நாளடைவில் அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை தற்போது 100,000க்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
மேலும் இந்த வேலியின் சொந்தக்காரர் ஒரு செம்மறி ஆடு மேய்ப்பவர் எனவும் அவர் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அந்த வேலியை பாதுகாத்து வருகின்றார்.
தற்போது அதிகமான சுற்றுலா பயணிகள் அந்த இடத்துக்கு வருகைதருவதோடு புகைப்படம் எடுக்கவும், தாங்களாகவே உள்ளாடைகளைத் தொங்கவிடவும் தயாராக இருப்பதாகவும் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

அகற்ற உத்தரவு
வனாக்கா சமூக வாரியம் கடந்த 2006ஆம் ஆண்டு குறித்த வேலியில் இருந்து உள்ளாடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் குறித்த வேலியில் 800 உள்ளாடைகள் அகற்றப்பட்டது.
ஆனாலும் கொலப்போக்கில் அங்கு உள்ளாடைகளை கழற்றி வேலியில் போட்டு செல்லும் நிலை வாடிக்கையாக மாறியது. தடையுத்தரவுக்கு பதிளலிக்கும் விதமாக, அருகிலுள்ள வனகா உள்ளூர்வாசிகள் குழு, வருடாந்திர வனகா சமூக விழாவில் உலகின் மிக நீளமான ப்ரா சங்கிலியை உருவாக்க முயற்சித்தது.
அதனடிப்படையில் சுமார் 7,400 உள்ளாடைகளைக் கொண்ட மிக நீண்ட சங்கிலியை உருவாக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், உலக சாதனைக்கு அதன் எண்ணிக்கை குறைவாகவே அது இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 100,000 உள்ளடைகளை கொண்ட நீளமானது வேலியாக காட்சிப்படுத்தப்பட்டு சமூக தொண்டுக்காக அமெரிக்க டொலர் 10,000க்கு மேல் திரட்ட முடிந்தது.

இவ்வாறு அந்த வேலியின் கதை பிரபலமாகவும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்பு வேலியில் தொங்கவிடப்பட்ட உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி மேலும் பிரபலமடைய ஆரம்பித்துள்ளது.
மேலும், மார்பக புற்றுநோய் விழிப்புனர்வுக்கான விசேட இடமாகவும் இந்த இடம் அறியப்படுகின்றது.
முன்னதாக அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்துவந்த நிலையில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வேலியில் உள்ளாடைகளை தொங்கவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

![]()