யாழ்., ஊர்காவற்றுறை கோவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button