நாயாக மாறிய ஜப்பானியர், மீண்டும் பூனை அல்லது நரியாக மாற திட்டம்?
கடந்த வருடம் நாயாக மாறிய (ஆடை வடிவமைப்பின்மூலம் மட்டுமே மாறியிருக்கிறார். அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யவில்லை) ஜப்பானியர் ஒருவர், மீண்டும் தான் வேறு விலங்காக மாறப்போவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.
பொதுவாக செல்லப்பிராணிகளின் மீது மனிதர்களுக்கு இருக்கும் அன்பை வர்ணிக்க வார்த்தையே இல்லை. தாங்கள் வளர்க்கும் விலங்கின் பெயரை வீட்டு ரேஷன் கார்டில் மட்டும்தான் சேர்ப்பதில்லை. மற்றபடி, அவற்றை தங்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே பார்க்கும் அளவிற்கு பிரியமானவர்களாக இருப்பார்கள்.
இது விலங்குகளின் மீது மனிதர்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், ஜப்பானில் ஒருவர் இதையெல்லாம் கடந்து விலங்காகவே தன்னைமாற்றி கொண்டுள்ளது வியப்பினையும் அதிர்ச்சியினையும் கடந்த வருடம் ஏற்படுத்தியது.
(குறிப்பு – ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் தனக்கு பிடித்த நாயின் தோற்றத்தை கொடுக்கும் உடையை தயாரித்து, அதை அணிந்துகொண்டார். அதுவே நாய் போன்ற தோற்றத்தை அவருக்கு கொடுத்துள்ளது. மற்றபடி அறுவை சிகிச்சை ஏதும் செய்யவில்லை)
![]()