இந்தியா
மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி?
நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் சௌமியா அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது அதில் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர் சௌமியா அன்புமணி என்பதும் அவர் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரது வெற்றி உறுதி என்று கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அவரது அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சராக சௌமியா அன்புமணி பதவி ஏற்பார் என்றும் அவருக்கு முக்கியத்துறை ஒன்று வழங்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை அடுத்து 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் பாஜக உட்பட ஒரு மெகா கூட்டணி அமைத்து அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.