சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை ; வட கொாியாவில் விநோத அறிவிப்பு

வட கொாியாவில் பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரபலமான அலங்கார பொருட்களுக்கு ஏற்கனவே ஜனாதிபதி  தடை விதித்தார். தற்போது சிவப்பு நிற உதட்டு சாயத்திற்கும் தடை விதித்ததோடு இந்த தடையை மீறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சிவப்பு வண்ணம் கம்யூனிசத்தின் ஆஸ்தான நிறமாக பார்க்கப்பட்டாலும் பெண்கள் பூசிக்கொள்ளும் உதட்டு சாயத்தை முதலாளித்துவத்தின் சின்னமாக வடகொரியா ஜனாதிபதி பார்ப்பதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *