அதிபராக சஜித் பிரதமராக ரணில் என்ற கோரிக்கை: கட்சி பொதுச்செயலாளர் எதிர்ப்பு

அதிபர் சஜித் (Sajith Premadasa) மற்றும் பிரதமர் ரணில் (Ranil Wickremesinghe) என்ற கோரிக்கைக்கு நாம் உடன்படப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர்  ரணில் விக்ரமசிங்கவையும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை.

கட்சி உறுப்பினர்கள்

ரணில் மற்றும் சஜித் இணைய வேண்டும் எனக் கட்சியில் உள்ள ஓரிருவரே பரிந்துரைத்தாலும் அவருடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது.

கட்சியில் உள்ள 95 சதவீதமான உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில்தான் உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளார்.

அதிபர் தேர்தல்

இரு தரப்பையும் இணைப்பதற்கு வெளிநாடொன்று முற்படுகின்றது என்ற கருத்தையும் நான் ஏற்கவில்லை அத்தோடு எமது கட்சியை வெளிநாடு வழிநடத்த முடியாது.

சஜித் அதிபர் மற்றும் ரணில் பிரதமர் என்ற கோரிக்கை தொடர்பில் நாம் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடவில்லை மேலும் அதற்கான தேவைப்பாடும் கிடையாது அத்தோடு அடுத்த அதிபர் தேர்தலில் சஜித் 75 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *