இந்தியா

மருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 78 விமான சேவைகள் இரத்து

ஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள்  மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டதால் 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் விமான ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எயார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *