இந்தியா

கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம்

2024 என்பது உலகின் போக்கை மாற்றக்கூடிய பல சக்திவாய்ந்த நாடுகளில் தேர்தல் நடைபெறும் ஆண்டாகும்.

உண்மையில் இந்த ஆண்டு உலக சனத்தொகையில் பாதியளவான மக்கள்(04 பில்லியன்) தேர்தல் மூலம் பல உலக நாடுகளின் தலைவர்களை தெரிவு செய்யவுள்ளனர். அமெரிக்கா(United States) மற்றும் இந்தியா(India) உட்பட உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 60 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில்(Russia) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று, புடின் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளார் மேலும், பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பங்களாதேஷில்(Bangladesh) பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.

இலங்கையில்(Sri lanka) ஜனாதிபதி தேர்தல் 2024 ஒக்டோபரில் நடைபெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இன்று சர்வதேசத்தின் கவனம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்(India) தேர்தல் மீது உள்ளது. இது இலங்கையின் அரசியலை பெரிதும் பாதிக்கிறது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு இந்தியாவின் பொதுத்தேர்தல் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) முஸ்லீம் கடும்போக்காளர்களுக்கு எதிராக செயல்படப் போவதாக அறிவித்தார்.

இது இந்திய இந்துக்களை மிகவும் கவர்ந்த தேர்தல் வாக்குறுதியாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ஆனால் அதுபோல இந்தியாவில் தற்போது இந்துத்துவம் மேலோங்கி காணப்படுவதை எம்மால் அறிய முடிகிறது.

இந்திய அரசியலின் பிரதான நாயகனாக 73 வயதான இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார். முன்னதாக சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகத் தலைவர்களில் மோடி முதல்வராக காணப்படுகிறார். இதனடிப்படையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என அரசியல் கருத்துக்களும் காணப்படுகின்றன.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.கவை(PJB) அமோக வெற்றிக்கு அழைத்துச் சென்ற மோடி, தனது இந்துவத்தால் உருவாக்கப்பட்ட பிளவுபடுத்தும் அதிருப்திகளையும் மீறி, மூன்றாவது முறையாக வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் ஆதரவாளர்கள் தங்கள் பிரதமரை ஒரு சிறந்த தொடர்பாளராகவும் தலைவராகவும் பார்க்கிறார்கள். அவரது ஆடைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, அவை ஆடம்பரமான நவீன உடைகள் முதல் பாரம்பரிய இந்திய உடைகள் வரை காணப்படுகின்றன.

இவை கூட அவரின் அரசியல் நகர்வை பிரதிபலிக்கிறது. காரணம் மக்களை கவரும் வகையில் மாநிலத்திற்கு மாநிலம் தனது ஆடைகளை மாற்றிக்கொள்வதை இந்திய செய்திகள் மூலம் அறியமுடிகிறது.

இந்நிலையில் இந்தியாவானது உலக அரங்கை அடைந்ததற்கு அவரது தலைமையே காரணம் என ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.