செய்திகள்
ஶ்ரீலங்காவின் ஜே.வி.பி தலைமையிலான கூட்டணியை முதன்முறையாக பேச்சுவார்த்தைக்கு டெல்லி அழைப்பு!

மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி 2022 கலவரத்திற்கு பின் கட்சித் தலைவர் அனுர குமார திசநாயகே மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கிறார்.
இலங்கைத் தீவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதியான, சிறீலங்காவின் இடதுசாரி ஜனதா விமுக்தி பெருமுனாவின் தலவர் அனுர குமார திசநாயக்காவின் தலைமையிலான குழுவை இந்திய அரசு தற்சமயம்ப புதுடெல்லிக்கு அழைத்திருப்பதை மிகவும் இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, நாளை காலையில் புறப்படும் நாங்கள் பேச்சுவார்தைகளுக்காக ஐந்து நாட்கள் இருப்போம் என்று இக்குழுவில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் இந்து ஆங்கில நாளிதழுக்கு கூறியிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஜே.வி.பி தலைவர் இந்திய அரசிடமிருந்து முறையான அழைப்பை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய தூதரகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி இக்குழு டெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்கு செல்லப்போவதாகவும் அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் வணிக சமூக உறுப்பினர்களை சந்திப்பதுடன் விவசாயம் தொழில் சம்பந்தமான சிறப்பு மையங்களையும் பார்வையிடுகிறார்கள்.
2020ல் நடந்த வரலாறு காணாத மக்கள் எழுச்சி பொருளாதார சீர்குலைவுக்கு மத்தியில் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கி எறிந்ததைத் தொடர்ந்து உயர்ந்து வரும்
திரு. திசநாயகேயின் மதிப்பு சிறந்த
மாற்றமாக கருதப் படுகிறது.

கொழும்பைச் சார்ந்த ஆய்வு மையத்தின் உடல்நல திட்டத்திற்கான நிறுவனம் கடைசியாக நடத்திய வாக்கெடுப்பின்படி இந்த ஆண்டு நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலிலுக்கு இவர் எல்லோராலும் ஆதரிக்கப் படுபவராக இருக்கிறார். ஐம்பது சதவீத மக்கள் திசநாயக்கேவுக்கும் முப்பத்து மூன்று சதவீத மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் ஒன்பது சதவீத மக்கள் மட்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கும் வாக்களிப்பதாக ஜனவரி மாதம் வந்த செய்தி தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் பலமுறை மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் திரும்பத் திரும்ப இதே முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பு கொடுத்துள்ளது.
மேலும், 1987ல் நடந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுப்பதாக அதை எதிர்த்து இக்கட்சி ஏற்று நடத்திய போராட்டங்களும்ஆயுதக் கிளர்ச்சியும் ஏறக்குறைய நான்கு சகாப்தங்களுக்குப்பின் ஏற்பட்டுள்ள இந்த வருகை ஜே.வி.பி இந்தியாவின் மீதான நிலைப்பாட்டில் குறிப்பிட்ட மாற்றமாக கருதப்படுகிறது.
கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஏற்று டிசம்பர் மாதம் 2023ல் இந்து ஆங்கில நாளிதழுக்கு திரு. திசநாயகே அளித்த பேட்டியில், இந்தியா மிக நெருங்கிய அண்டைநாடு என்போதோடு பெரிய பொருளாதாரம் மற்றும் அரசியல் மையமாக உருவாகி வருவதும் எங்களுக்கு தெரியும். ஆகையால் அரசியல் மற்றும் பொருளாதார சம்பந்தமான முடிவெடுக்கும்போது அது எந்த வகையில் இந்தியாவை பாதிக்கும் என்பதில் நாங்கள் எப்போதும் கவனத்தில் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
-சங்கர சுப்பிரமணியன்.
நன்றி: மீரா சீனிவாசன்/இந்து ஆங்கில நாளிதழ்.
![]()