“யார் அரசியலுக்கு வந்தாலும்….. நான் ஒரு திட்டம் போட்ருக்கேன்” ….. சரத்குமார்.

மதுரை விமான நிலையத்தில் சமக தலைவர் சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது. எல்லா நடிகர்களும் பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வருகிறேன். வரும் 2026 தேர்தலை எப்படி சந்திக்கனும் என்று திட்டங்களை வகுத்து வருகிறேன். அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். அரசியல் ஞானம் 14 வயதில் இருந்தே பள்ளி பாடத்திட்டத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button