உலக மொழியியலாளர்கள் வியந்த தொல்காப்பியம்!
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்ற உலக மொழியியலாளர்கள், தொல்காப்பியத்தின் தொன்மை சிறப்பை வியந்து பாராட்டினர்.
செம்மொழி தமிழாய்வுமத்திய நிறுவனம்,உ.பி., மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலையின் வரலாற்றுத் துறையும் இணைந்து, இணைய வழியில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தின. ‘தொல்காப்பியம் மற்றும் செம்மொழித் தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும்’ என்ற தலைப்பில், கருத்தரங்கு நடைபெற்றது.
அலிகார் பல்கலை வரலாற்றுத் துறை பேராசிரியர் நிஷாத் பாத்திமா பேசுகையில், ”தொல்காப்பிய ஹிந்தி பதிப்பை, பல்வேறு மொழியியல் துறை மாணவர்கள் விரும்பி எடுத்துச் சென்று குறிப்பெடுக்கின்றனர். பழமையான இலக்கண நுாலாக இருந்தாலும், தற்கால மாணவர்களையும் கவர்வது தான் தொல்காப்பியத்தின் சிறப்பு,” என்றார்.
ஜெர்மன் கொலோன் பல்கலை இந்தியவியல் துறை பேராசிரியர்உல்ரிக் நிக்லாஸ், ”தொல்காப்பியம், உலக இலக்கிய கோட்பாடுக்கான நுாலாக உள்ளது,” என்றார்.
செம்மொழி நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், ”தமிழின் செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பைஇந்தியர்கள் மட்டுமின்றி, உலக மொழியியலாளர்கள் அறியும் வகையில், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் மும்முரமாகஈடுபட்டு உள்ளோம்,” என்றார்.
மேலும், கருத்தரங்கில் பங்கேற்ற ஆப்பிரிக்க மொழியியல் ஆய்வாளர்கள், உலகின் பழமையான மக்கள் வாழும் நாடுகளின் கலாசாரக் கூறுகளை தொல்காப்பியம் பிரதிபலிப்பதாக பேசினர்.
நிறைவு விழாவில், செம்மொழி நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி, அலிகார் பல்கலை ஹிந்தி துறை தலைவர் முகமது ஆசிக் அலி உள்ளிட்டோர், கருத்தரங்கம், புதியபார்வையில் பயணித்ததாக பாராட்டினர். கருத்தரங்கை, உலக நாடுகளில் உள்ள மொழியியல் ஆய்வாளர்களும், அறிஞர்களும் இணைய வழியில் பார்த்து, தங்களின் கருத்துக்களை பதிவிட்டனர்.
மொழிபெயர்ப்பு பணி
செம்மொழி நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், ”தமிழின் செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பை இந்தியர்கள் மட்டுமின்றி, உலக மொழியியலாளர்கள் அறியும் வகையில், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
வாழ்வின் கோட்பாடு
தமிழ் மொழிக்கும், வட மாநில மொழிகளுக்கும்இடையில் நீண்ட உறவு நீடித்து வந்துள்ளது.அது, பண்பாடு, கலாசார ரீதியில் நிலைபெற்றது. இலக்கணம், இலக்கியம், பண்பாடு,சமூக அமைப்பு, வாழ்வின் கோட்பாடுஉள்ளிட்டவற்றை தொல்காப்பியம் பேசுகிறது.
![]()