பெண்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட தடை விதித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரம்ஜான் கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையை வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டாடக்கூடாது.
அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையான இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்கக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
முன்னதாக, பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் ஏற்கனவே தடை விதித்திருந்தனர். அதேபோல், கருத்தடை மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்தவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()