பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்… 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த கொடுமை

தெலுங்கானாவில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்தபோது பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலில் உள்ள அரசு தாய் நல மருத்துவமனையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நவ்யஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையை எடுத்தனர். அந்த பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வயிற்று வலியால் 18 மாதங்கள் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பின்னர் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது, பஞ்சுத்துணி இருப்பது கண்டறியப்பட்டது. எனவே மீண்டும் அந்த பெண் சிகிச்சைக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் காட்டன் துணி பண்டல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button