500 நாள் குகையில் வாழ்ந்துவிட்டு வெளியேறியுள்ள விளையாட்டு வீராங்கனை

ஸ்பெயினைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஒருவர் 500 நாள்கள் மனிதத் தொடர்பே இல்லாமல் குகையில் வாழ்ந்துவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அது உலகச் சாதனையாக இருக்கக்கூடும் என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

பீட்ரிஸ் ஃபிலாமினி (Beatriz Flamini) 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள கிரெனடா குகைக்குள் சென்றார்.

அப்போது அவருக்கு வயது 48.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கவில்லை. உலகம் இன்னும் COVID-19 நோய்ப்பரவலிலிருந்து மீண்டு வரவில்லை.

தற்போது 50 வயதாகும் திருவாட்டி ஃபிலாமினி, உலக நடப்புகள் பற்றி ஒன்றுமே தெரியாது எனக் குகையிலிருந்து வெளியாகிய பின் கூறினார்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்… உள்ளே என்ன தான் செய்தார்?

அந்த 70 மீட்டர் ஆழமான குகையில் அவர் உடற்பயிற்சி செய்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button