அமெரிக்காவில் ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்
அமெரிக்காவில் நபர் ஒருவர் ஓடும் காரில் இருந்து சுமார் 2 லட்சம் டாலர் பணத்தை சாலையில் வீசினார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 7:23 மணியளவில் இன்டர்ஸ்டேட் 5-ல் மைல்போஸ்ட் 192-க்கு அருகில் தனது காரில் இருந்து பணத்தை காரின் சன்னல் வழியே அள்ளி வீசினார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.
அந்த நபர் கொலின் டேவிஸ் மெக்கார்த்தி (38) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில் அவர், தனது பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பணத்தை அள்ளி வீசியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அள்ளி வீசிய பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 1.6 கோடி ஆகும்.
இதுகுறித்து மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கைல் கென்னடி கூறுகையில், “நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமான நிலைக்கு பங்களிக்கிறது” என்று கூறியுள்ளார்.
![]()