கதைகள்

ஸ்ரீ முருகன் டாக்கிஸ்! …. ( சிறுகதை ) …. யாழ் எஸ் ராகவன்.

ஒருமார்கழி மாதத்து அதிகாலையில் ஆறரை மணி ஆகியும் இன்னும் இருட்டு விடாத நேரம்.தேனீர் குடித்துவிட்டு நடை பயிற்சி செல்லலாம் என தேனி பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தேன். தக்காளி பழம் விற்க்கும் ஒருவர் தன் பழங்களை எல்லாம் அந்த ட்ரெயில் அடுக்கி சைக்கிளை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

நீங்க “எம்ஜிஆர் செல்லையா தானே என்ன தக்காளி ப்பழம் போல விக்கிறீங்களா” எனது கேள்வியே சற்றும் எதிர்பாராமல் அவர் ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் என்னை திரும்பி பார்த்து என் பேரு செல்லையாதானுங்க ஆனா எல்லாரும் எம்ஜிஆர் கூப்பிடுவாங்க அதாச்சுங்க 25 வருஷம் அதுக்கு அப்புறம் உள்ள உங்களுக்கு யாருக்குமே தெரியாதே நீங்க எப்படி கரெக்டா என்னைய பார்த்து கண்டுபிடிச்சீங்க..

இரண்டாவது ஆட்டம்

சைக்கிளில் டபுள்ஸ் ஓட்டிக்கொண்டு இரண்டாவது ஆட்டத்திற்கு செல்வது என்பதெல்லாம் அந்த காலத்தில் ஒரு சுகமான சுமை.அதிலும்ஒரே வண்டியில் போகும்போது ஒருவர் வரும்போதுஒருவர் என பிரித்துக் கொண்டுஓட்டுவது வாடிக்கை. போகும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

வரும்போது தான் தூக்கம் வரும் அதில் ஓட்டுவது தான் மிகவும் கடினமான செயல்.ரேடியோ குழாயில் ,’முருகா நீ(அல்லால்) எல்லாம் தெய்வமில்லை,’ என்ற பாட்டுசீர்காழியின்வெண்கல

குரலில் ஒலித்துக்கொண்டிருக்கும்.கடைசியாக ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை மட்டும் போடுவார்கள் அந்த இசை வந்து விட்டால் படம் போட ப்போகிறார்கள் என்று அர்த்தம்.அதைக் கேட்டவுடன் எல்லோரும்வேகவேகமாகதிரையரங்கிற்குள்செல்வதுவழக்கம்.

திரையரங்குபல பேருக்கு வாழ்க்கைகொடுத்துக்கொண்டிருந்தது.உள்ளேயும் வெளியேயும் எண்ணற்ற பேர் அதை நம்பி பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதில் குலுக்கட்டை என்ற ஒரு சூதாட்டம் இருந்தது.இது ஒரு ஏமாற்று என்று பலருக்குத் தெரியாது காசு போட்டால் அதிக வரும் என்று நம்பி பல பேர் பணத்தை விட்டு விடுவார்கள். ஒரு பெரியவர் அங்கு உட்கார்ந்து நிறைய திரைப்பட நடிகர்களின் படத்தை வைத்துக்கொண்டு காய்களை உருட்டி அதன் மேல் பணம் கட்டினால் இருமடங்காகும் என்று ஏமாற்றுவார்.

நிற்க

,’மலரே மலரே உல்லாசம்,’ “கண்ணில் என்ன கார்காலம்”

“என்ன தேசமோ இது என்ன தேசமோ”

ஆகியஅற்புதமான பாடல்கள் இடம் பெற்ற திரைப்படம்” உன் கண்ணில் நீர் வழிந்தால்”ரஜினிகாந்த் படம்

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாலுமகேந்திரா இயக்கம்பாலுமகேந்திரா படங்களில்இதுசற்றுவித்தியாசமான மசாலா படம், க்ரைம் ,த்ரில்லர்,

காவல்துறை அதிகாரிகள் சிலர் செய்யும் அக்கிரமங்கள் பாலியல் சீண்டல்கள் பற்றி எண்பதுகளின் இறுதியில் செய்தித்தாளில் அதிகமாக வந்துகொண்டிருந்தன.

அதனை மையப்படுத்தி இந்த படம் இருந்தது.

மெதுவாகவே காட்சிகள் நகரும்.

விறுவிறுப்பு, வேகம் என்பதெல்லாம்இல்லை

விகே ராமசாமி நகைச்சுவைஇந்த படத்தின்எரிச்சலையேவரவைத்தது.

நிறைய படம் இரண்டாம் ஆட்டம் பாத்திருக்கேன் .தேனி மாவட்டத்தில்கோகிலாபுரம்

ஆணைமலையன்பட்டி.இராயப்பன்பட்டி ஆகிய மூன்று ஊருக்கும் சேர்த்து ஒரே ஒரு திரையரங்கு .இராயப்பன்பட்டி ஆணைமலையன்பட்டிஆகிய

இரண்டுஊருக்கும்நடுவேஅமைந்திருந்தது. எப்பொழுது தொடங்கியது என தெரியாது.1986முதல்2006வரை மிகவும் நன்றாக இயங்கியது (அதாவது எனக்கு விபரம் தெரிந்த வரை ) அந்த காலத்தில் பொழுது போக்கின் சொர்க்கம் அது .

திரையரங்கில் தொழில் நுட்பம் வளராதகாரணத்தால்நான்கு இடைவேளை விடுவார்கள். பொதுவாக இரண்டு காட்சிகள் சனி ஞாயிறுகளில் மூன்று காட்சிகள்.திருவிழாவின் போதும் பண்டிகைகளின் போதும் நான்கு காட்சிகள்.

பச்சை வண்ணம் 1ரூபாய் 50காசு.பெஞ்சு .ரோஸ் வண்ணம் 2.00ரூபாய் சேரு .ஆண்கள் வரிசை தனி பெண்கள் வரிசை அமரும் இடமும் அவ்வாறேகுடும்பத்தோடு பார்க்க தனியே சேரு அமைப்பு. புகைபிடிப்பதை தடைசெய்யாத காலம் ஆதலால் உள்ளே பீடி ,சிகரெட் , சுருட்டு எனசகட்டு மேனிக்கு புகை மண்டலத்தை கக்கவிடுவார்கள்.

மூட்டை பூச்சி மூத்திரவாடை இவைகளுக்கு மத்தியில் கடலைமிட்டாய் முறுக்கு உள்ளேயே விற்பார்கள். இப்படிஆயிரம் கதைகள் கொண்டது அந்த திரையரங்கு மெல்ல அந்த ஞாபகக்கிணற்றில் நீர் எடுப்போம்.

கர்சிப் எடுத்து விட்டு என் கைகளை பிடித்துக் கொண்டார். அதெல்லாம் ஒரு காலம் தம்பி.ராஜேந்திரா ரோடு வேஸ் என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட அந்த பேருந்து பெரியகுளத்தில் இருந்து சுருளித் தீர்த்தத்திற்கு நாள்தோறும் ஆட்களை ஏற்றுக் கொண்டு வரும்.ஆட்களை கொட்டுவதும் பிறகு நிரப்பி கொள்வதும் அந்த பேருந்தின் வாடிக்கை அந்தப் பேருந்தில் பல பொருள்கள் வரும் அதில் முக்கியமானதாக புதிய படத்தின் படப் பெட்டியும் போஸ்டர்களும் வரும்.

எங்கப்பா எம்ஜிஆரை வர சொல்லு நேரம் ஆகுது சீக்கிரம் பெட்டியும் போஸ்டரும் இருக்கு எடுத்து போக எம்ஜிஆர் எங்கப்பா என்று எல்லோரும் கேட்க. ஸ்டைலாக சைக்கிளை நிறுத்திவிட்டு கர்சிப் எடித்து கழுத்தில் மாட்டிக் கொண்டு அந்த படப்பெட்டியை போஸ்டரையும் தூக்கிக் கொண்டு சைக்கிள் வைத்து பட பெட்டியைக் கொண்டு வரும் காட்சி ஊரே உறவாய் பார்க்கும் காட்சி.செல்லையா எம்ஜிஆர் செல்லையானது தனிக்கதை ஊருக்குள் அவர் பல்வேறு வேலைகளை செய்வார்.

எல்லாமே திரையரங்கம் சார்ந்த வேலைகள் தான். புது படத்திற்கு பெட்டியை பேருந்தில் இருந்து இறக்கிக் கொண்டு வந்து சேர்ப்பது பசை காய்ச்சுவது போஸ்டரை ஒவ்வொரு கடைக்கும் பக்கத்தில் தெருத்தெருவாக ஓட்டுவது பிறகு காட்சி நேரத்தில் டிக்கெட் கிழிப்பது

இடைவெளியில் கேண்டில் அமர்ந்து முறுக்கு டீ போட்டு தருவது இன்று கலெக்ஷன் கல்லாவில் அமர்ந்து மேனேஜருடன் பணத்தை எண்ணி அவரை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என்று அவர்

பம்பரமாக ஓடிக் கொண்டிருப்பார்ஆப்ரேட்டர் ஒரு நாள் கெடா விருந்துக்கு சென்று வந்து வைத்தாலே போன பொழுது படப்பெட்டியை ரீல் மாற்றி படம் ஓட்டவும் பழகி இருக்கிறார். எம்ஜிஆர் செல்லையா. ஒருமுறை சேவிங் செய்து கொள்ள சலூன்கடை செல்லும் பொழுது மீசையை எம்ஜிஆர் மாதிரி வரஞ்சு விடுயா என சலுன்காரனை பாடப்படுத்தியிருக்கிறார்.

அப்போது முதல் சாதாரண செல்லையா எம்ஜிஆர் செல்லையா விட்டார்.சைக்கிள் செல்லும் பொழுது எப்பொழுதும் எம்ஜிஆர் பாடலை குணப்படுத்திக் கொண்டே செல்வார் “ஏன் என்ற கேள்வி …கேட்காமல் வாழ்க்கை இல்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை?.. என்று அவராக ஒரு ராகம் போட்டு பாடிக்கொண்டிருப்பார்.

வாய்க்கால் வரப்பு சந்தை டீக்கடை என எங்கே பார்த்தாலும் எம்ஜிஆர் செல்லையா புதிய திரைப்படத்தை பற்றியும் அதற்கு போஸ்டர் ஒற்று அழகை பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார் அதுவும் எம்ஜிஆர் படம் என்றால் அவருடைய குஷிக்கு அளவே இல்லை எம்ஜிஆர் எப்படி வந்தார் தெரியுமா எப்படி சண்டை போட்டார் தெரியுமா என்னம்மா பாட்டு பாடினார் தெரியுமா.

என்று எப்பொழுதும் எம்ஜிஆர் புகழை பாடிக்கொண்டே இருப்பார் செல்லையா என்னமோ இவரை ,பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரைப் போல எவ்வளவு லாபம் நல்ல கலெக்ஷன் என்ன கூட்டம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் எம்ஜிஆர் படத்தின் போஸ்டரை ஒட்டுவதற்காக தான் என்பதை போல அந்த போஸ்டர் ஒட்டும் போது அவர் எம்ஜிஆரை பார்த்து அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.தியேட்டரில் படம் முடிந்து யாராவது தூங்கிவிட்டார் அவர்கள் எழுப்பி வீட்டுக்கு அனுப்புவது.

சைக்கிள் ஸ்டாண்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அது சரி செய்வது என்று யாராவது குடித்துவிட்டு ஓவராக அலம்பல் பண்ணும் போது அதை எம்ஜிஆர் மாதிரி இவர் தட்டி கேட்டு நியாயம் பேசுகின்ற காட்சி எல்லாம் பார்க்கிறவர்கள் என்னமோ எம்ஜிஆர்ஆகவே நடந்து வருகிற மாதிரி அவர் பேசுகிற மாதிரியே இவரை கிண்டல் செய்வார்கள் கிழவிகளை எல்லாம் கட்டிப்பிடிப்பது

பெண்கள் வரிசைகளில் இவர் சென்று சட்டம் பண்ணுவது என்ற ஒரு மனிதர் எம்ஜிஆர் தோரண விழாவை வாழ்வது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது.தீபாவளி பொங்கல் காலம் என்றால் அவரைப் பிடிக்கவே முடியாது.கூட்டம் அலைமோதும் டிக்கெட் வாங்கி தரச் சொல்லி எல்லோரும் எம்ஜிஆர் செல்லையாவை பிடிப்பார்கள்.ஏக கிராக்கி அவருக்கு மிகுந்த பகுமானத்தோடு நடந்து கொள்வார் சிலருக்கு சீட்டு வாங்கி கொடுத்து தன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்வார்..

ஒருமுறை மன்னாதி மன்னன் படம் வந்த பொழுது குதிரை வண்டியில் தான் படப்பெட்டி எடுத்து விட வேண்டும் என்று மேனேஜரிடம் சண்டை போட்டு அதற்கான பணத்தை கூட என்னுடைய சம்பளத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். என்று சொல்லிவிட்டு சொன்னபடியே குதிரை வண்டியில் படப்பெட்டி எடுத்து வந்தவர் எம்ஜிஆர் செல்லையா. ராஜேந்திர பேருந்து ஊருக்கு வராமல் இருந்த காலத்தில் கூட நடந்தே சென்று படப்பெட்டியை தோளில் சுமந்து சரியான நேரத்தில் திரையிட செய்ததில்அவருடைய பங்கு பெரிதாக இருந்தது. ஊருக்குள் பஞ்சாயத்து அலுவலகம் முன்னர் புதிதாக டிவி வந்தபோது அவர் அழுத அழுகை சொல்லி மாளாது. ராமசாமி அவ்வளவு தாண்டி இனிமே தியேட்டர்ல இழுத்து மூடிருவாங்கவீட்டுக்கு வீடு பெட்டி இலவசமாக கொடுக்க போறாங்க

செல்லையாவிடம் கேலியாகஎல்லோரும் பேசினார்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அப்படி எல்லாம் இல்ல என்னைக்கும்எம்ஜிஆர் திரையில் வருவாரு நான் போஸ்ட் ஓட்ட தான் செய்வேன் என்று வீரப்பாக பேசிவிட்டு அங்கிருந்து அழுதபடியே வீட்டுக்கு ஓடி வந்தார் செல்லையா.ஒரு வழியாக பூதம் வருகிறது பூதம் வருகிறது என்று சொல்லி அந்த பூதம் வந்துவிட்டது.

சைக்கிள் கடை வைத்திருப்பவர் கேன்டீன் நடத்துபவர் வெளியே குழுக்கட்டை போடுபவர் கப்பக்கிழங்கு கடை பாயாச கடை டீக்கடை ஏகப்பட்ட பேரின் வாழ்க்கையில் மண்ணள்ளிப்படும் ஒரு காலம் வந்து தான் சேர்ந்ததுஎவ்வளவு காலம் தான் கடனுக்கு தியேட்டர் நடத்த முடியாது தியேட்டரை மூடலாம் என்று இருக்கிறேன் என்னால் வட்டி கட்ட முடியல பேசாம வித்திட்டுசொந்த ஊருக்கே போலாம்னு இருக்கேன் செல்லையா நீ வேற இடம் வேலை பார்த்துக்க எனமுதலாளி சொன்ன பொழுது

சற்று அதிர்ந்து ஆடித்தான் போனார் தனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது தன் வாழ்நாளில் 45 ஆண்டு காலம் வரை தியேட்டரிலேயே வாழ்ந்து விட்டேன் போஸ்டர் ஒட்டுவது டிக்கெட் டிக்கெட் கிழிப்பது பணம் ஓட்டுவது என எல்லா வேலையும் பார்த்து இங்கே இருந்து நான் என்ன செய்வேன் எங்கே போவேன் என்று அழுது புலம்பி நான் செல்லையாதிருப்பூருக்கு வேலைக்கு செல்லலாமா அல்லது சென்னைக்கு போகலாமா வேறு எந்த வேலை செய்யலாம் என்று அவன் பலவிதமாக பலவரிடம் யோசனை கேட்டான்.

எல்லா இடத்திலும் பழைய தொழில்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது இனி ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் பிழைக்க முடியாது நாளை இந்த வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் இருந்த போதும் பெருநகரங்களில் வருமானம் கிடைத்தாலும் அங்கே செலவு அதிகமாக இருக்கும்.சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்காமல் அவ்வப்பொழுது திரைப்படம் பார்க்க சென்று படிப்பை பாதியிலேயே விட்டான் செல்லையா அப்பன் பார்த்த வேலையை மகன் அப்படியே தொடர்ந்தான் பலபேர் தோடத்து வேலைக்கு அழைத்த பொழுதும் தோட்டத்து வேலையை அவன் விரும்ப வில்லை .

அம்மா இருக்கும்போது ஒன்னைய ஒருத்தி கையில் பிடித்து கொடுத்து கண்ணை மூட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள் குடியிருந்த கோயில் தாயைக் காத்த தனயன் என்று. செல்லையா வசனம் பேசிய நாட்களை கடத்தி வந்தார் ஒரு வழியாக மரகதம் வந்து சேர்ந்தாள்.

கட்டிக் கொடுத்து அஞ்சு ஆறு வருஷங்களுக்கு ஒரு மகனும் வந்து பிறந்தான் வந்த மருமகளுக்கு தோட்டத்து வேலை மிகவும் பிடிக்கும் நாள்தோறும் வேண்டி தோட்டத்து வேலைக்கு சென்று காய்கறிகள் எல்லாம் சேகரித்து வருவாள் அவள் தான் இந்த தேற்ற நம்பி இருக்காதீங்க ஒரு நாள் இந்த தியேட்டர் இடிச்சூநம்ம கண் முன்னாடியே போடுவாங்க. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம் இந்த தியேட்டர்ல உங்களுக்கு என்ன கிடைக்குது எல்லாம் வேலையும் பாக்குறீங்க.

இத்தனை வருஷம் இந்த தியேட்டர் கட்டி அழுதீங்களே உங்களுக்கு என்ன கிடைச்சுச்சு எல்லா வேலையும் பார்த்து எந்த பிரயோஜனமும் இல்லையே ஒரு நக நட்டுண்டா ஒரு வீடு வாசல் உண்டா எதுவுமே இல்லாம இங்க வேலை பார்த்து இன்னும் அப்படியே காலம் கழிக்கணுமா சும்மா எம்ஜிஆர் பெயர் வச்சா அதுஅது சோறு பொங்க ஆகுமாமிகுந்த வேதனையோடு மனைவி பேசியதை மனதில் வைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தான் எம்ஜிஆர் செல்லையா.

ஒரு பேப்பரில் நான்கு ஐந்து 100 ரூபாய் கட்டுகளை சுற்றி அவரிடத்தில் கொடுத்து எதும் மொத்தமாக வைத்துக் கொள்ளும் சொல்லாதே உனக்கு மட்டும்தான் இவ்வளவு பணம் தருகிறேன் வேறு வழியில்லை நாளைக்கு இன்னும் தியேட்டர் இடித்து விடுவார்கள் என்று சொன்னார் முதலாளி.அதுவரை எம்ஜிஆர் பானியில் குடியை அறவே வெறுத்த செல்லையா தியேட்டர் இடிக்கப்பட்ட நாள் அன்று அளவுக்கு மீறி குடித்தான்.

பின்னர் மனைவியின் கதறல் காரணமாக தக்காளி பழ வியாபாரம் செய்ய தொடங்கினான். ஒரு கட்டு பீடி முழுவதும் குடித்து முடித்து தன் கதையை முழுவதும் சொல்லி முடித்தார் செல்லையா நான் அந்த திரையரங்கில் இரண்டாவது ஆட்டம் பார்த்த பல்வேறு காட்சிகளை பார்த்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகரத்தொடங்கினேன்.பல்வேறு தொழில்கள் இன்று உருமாறி விட்டன..

Loading

One Comment

  1. சிறப்பான சிறுகதை.திரையரங்க வாழ்வை,சூழலை நம் கண் முன் சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *