ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது!
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளதை அடுத்து அவர் எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
![]()