எம்ஜிஆர் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம்!
எம்ஜிஆர் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால்
புலப்படும் உண்மையான தகவல்கள் .
படத்தின் தலைப்பு – மிகவும் எளிமை மற்றும் எல்லோர் மனதிலும் பதியும் பெயர் .
படத்தின் பாடல்கள் -100% புகழ் பெற்ற பாடல்கள் – சமூக சிந்தனையுள்ள கொள்கை பாடல்கள்.
இனிய காதல் கீதங்கள்
படத்தின் கதை – பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையான கதை – தாய் பாசம் – கடமை – வீரம் – நேர்மை – ஒழுக்கம் – போன்ற மக்கள் விரும்பும் கதைகள் .
நடிகர்கள் பட்டாளம் – மக்கள் திலகத்தின் படங்கள் கதைக்கு பொருத்தமான பல குணச்சித்திர நடிகர்கள் – வில்லன் நடிகர்கள் -சிறப்பான தேர்வு .
ஒளிப்பதிவு – ஒலிப் பதிவு- பின்னணி இசை சேர்ப்பு – படத்தொகுப்பு – என்று அனைத்து துறைகளிலும் மக்கள் திலகத்தின் ஈடுபாடு .
ஒரு சராசரி ரசிகனின் மனநிலை புரிந்து , அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு
தன்னுடைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் .
படம் பார்க்க வரும் பொது மக்கள் தங்களை மறந்து மூன்று மணி நேரம் – மனம் விட்டு சிரித்து
மகிழ்ச்சியுடன் , சிரித்த முகத்துடன் படம் பார்த்துவிட்டு , மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்க்க வரும் நிலைக்கு கொண்டு வந்தவர் மக்கள் திலகம் .
சிரித்த முகம் – இயல்பான நடிப்பு – வீரம் – காதல் – கடமை – நாட்டு மக்களுக்கு நல் அறிவுரைகள் – சமுதாய கொள்கைகள் – நாகரீகமான வசனங்கள் – எதிரியிடமும் கருணை –
நல்லதே நினைத்து
நன்மையே செய்து
நல்லவனாகவே வாழ்ந்து
மக்கள் மனதில் – 1950 முதல் நிலைக்க ஆரம்பித்து – 1965ல் எங்க வீட்டு பிள்ளையாக
1967ல் காவல்காரனாக – 1971 ல் இந்தியாவின் சிறந்த நடிகராக – -உயர்வு பெற்று வந்ததற்கு காரணம் அவரது திரைப்பட வாழ்க்கையில் வகுத்த தனி பாதை – வெற்றி பாதை – நேர்மையான பாதை .
30 வருடங்களில் 115 படங்களில் மட்டுமே நடித்து 300 வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத
மாமனிதர் மக்கள் திலகம் .
அவரது திரை உலக புகழ் என்றும் அழிவில்லாத வரலாற்று காவிய சின்னம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து
![]()