இலக்கியச்சோலை

அவுஸ்திரேலியக் கதைகள் “ தைலம் “ சென்னையில் நூல் வெளியீட்டு அரங்கு!

அவுஸ்திரேலியா இலக்கிய படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “ தைலம் “ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலை 10-00 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை மேற்கு கே.கே. நகரில் அமைந்த டிஸ்கவரி புக்பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில் ( 1055 B , முனுசாமி சாலை – மேற்கு கே. கே. நகர் – சென்னை 78 ) கவிஞர் தாமரை பாரதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும்.

அறிமுகவுரையை இலங்கையிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளும் எழுத்தாளர் கருணாகரனும், நூல் விமர்சன உரைகளை கவிஞர்கள் வேல்கண்ணன், கவிஞர் சாம்ராஜ், ஆகியோரும், அவுஸ்திரேலியாவிலிருந்து கலந்துகொள்ளும் தைலம் நூலின் தொகுப்பாளர் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஏற்புரையையும் நிகழ்த்துவர்.

அம்பிகா குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துவார்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

—-0—-

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *