மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் அறிவை மிஞ்சிய இலங்கை சிறுமி

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் தனித்துவமான திறமை குறித்து தற்போது உலகின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அவரது திறமை மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங் ஆகியோரின் IQ ஐ மிஞ்சுவதாக தெரியவிக்கப்படுகின்றது.
அரியானா தம்பரவா ஹெவகே என்ற சிறுமி இந்த தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தற்ப்போது 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியாகும்.
அரியானா தனது பெற்றோருடன் பிரித்தானியா – Huddersfield பகுதியில் வாழ்ந்து வருகின்றார். Huddersfield உள்ள செயின்ட் பேட்ரிக் கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் அரியானா, நேற்று நடந்த மென்சா IQ தேர்வில் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அதற்கமைய, இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் மதிப்பிடப்பட்ட IQ 160 ஐ விட அதிகமாக உள்ளது.
இலங்கையின் மாத்தளையை பிறப்பிடமாக கொண்ட அரியானாவின் குடும்பத்தினர் 2009 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்த நிலை பிரபல விஞ்ஞானி ஆவதே தனது நம்பிக்கை அரியானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.