செய்திகள்பலதும் பத்தும்

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது!

2022  உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் தயாராக உள்ளது. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு .

உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும்.

1963-ம் ஆண்டு பிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த முறை போட்டிகளை நடத்துவதால் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20-ம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது.

28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமையை பெற உள்ளது

கத்தார் போட்டி. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ம்ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. எப்படி இருப்பினும் கால்பந்து போட்டிக்காக உலகநாடுகளின் கண்கள் கத்தாரைநோக்கி திரும்பியுள்ளன.

உலக கால்பந்து போட்டி வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை உலககோப்பையை கைப்பற்றிய அணியாகும். 20: 1930ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை போட்டிக்குப் பிறகு இதுவரை 20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு எட்டு பிரிவுகளில் 32 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டிக்காக கத்தாரில் மொத்தம் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 8-ல் 7 மைதானங்கள் முன்பே கட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஒன்றும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருமணி நேர பயணத்தில், அதிகபட்சமாக 43 மைல்கள் தொலைவில் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.