சங்கமம்
திறமையான வீரர்களை உருவாக்க செயற்கை இழை மைதானங்கள் அவசியம் – ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே
திறமையான வீரர்களை உருவாக்க செயற்கை இழை மைதானங்கள் அவசியம் என ஆக்கி இந்தியா அமைப்பின் திலிப் திர்கே தெரிவித்துள்ளார். ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான திலிப் திர்கே அளித்த பேட்டியில், ‘பஞ்சாப், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், மும்பை, போபால் உள்ளிட்ட நகரங்களிலும் ஆக்கி விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். இந்த இடங்களுக்கு சென்று ஆக்கி விளையாட்டை அடிமட்ட அளவில் இருந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்க இத்தகைய இடங்களில் அதிகமான செயற்கை இழை மைதானங்கள் அவசியமாகும்’ என்றார்.