73 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு! இணையத்தில் வைரலான நடிகை
கேரளாவில் 73 வயது நடிகை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. தற்போது 73 வயதாகும் இவர் தனது 13 வயதில் இருந்து ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார்.
லீனா ஆண்டனி பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர். நடிக்க சென்றதால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது 73வது வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பிய லீனா ஆண்டனி, தீவிரமாக படித்து மீண்டும் தேர்வு எழுதியுள்ளார்.
இதுகுறித்து பேசிய லீனா ஆண்டனி, ‘நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுத எனக்கு உதவியாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.
நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருந்த லீனாவின் கணவர் ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.