பலதும் பத்தும்

1 வாழைப்பழம் ரூ.565 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரே விமான நிலையம்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம், மிகச் சிறிய விமான நிலையங்களைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால், உலகின் விலை உயர்ந்த விமான நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? விலை உயர்ந்த விமான நிலையம் என்பது அதன் மதிப்பில் இல்லை, அங்கு விற்கப்படும் பொருட்களின் விலையில் ஒரு விமான நிலையத்தை உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம் என்று குறிப்பிடுகின்றனர்.

அதற்கான காரணம் என்ன, அங்கு பொருட்கள் என்ன விலைக்கு விற்கப்படுகின்றன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

கம்பீரமான கட்டிடக்கலை முதல் உயர்தர சேவைகள் வரை, பெயர் பெற்ற இந்த விமான நிலையம், அதன் ஆடம்பரமான வசதிகளுக்கு மட்டுமல்லாமல் அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையாலும் வசதியானதாக கூறப்படுகிறது.

பிரபலமான உணவகங்கள் முதல் சிறிய கஃபேக்கள் வரை என அனைத்து உணவகங்களிலும் விதவிதமான உணவுகள் உங்களை கவர்ந்தாலும், அந்த உணவுகளின் விலை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, இந்த விமான நிலையத்தில் ஒரு நேரத்திற்கு சாப்பிட செலவழிக்கும் பணத்தை வைத்து விமான நிலைய வளாகத்திற்கு வெளியே மூன்று வேளை உணவை உண்ண முடியும் என்கிறார்கள்.

பில்டப் ஓவரா இருக்குனு நினைக்கிறீங்களா, அந்த அளவுக்கு அங்க விலை உயர்ந்ததாக இருக்கும். அப்படி என்ன விமான நிலையம் அது அப்படினு யோசிக்கிறீங்களா? துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையம் தான் அது. அங்கு விற்கப்படும் உணவு மற்றும் பிற பானங்களின் அதிக விலை காரணமாக இது ‘உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம்’ என்று பயணிகளால் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button