உளவு நிறுவனங்கள்!…. (தொடர்: 32)….. மௌனஅவதானி.

நோய்க்கான மருந்தைக் கொடுக்கிறோம் என்ற போர்வையில், கொடுக்கப்படும் மருந்துகள், குறிப்பிட்ட நோயிலிருந்து குணமடைய வைக்கின்றன என்று உடல் உணர்ந்த போதும் அது உண்மையாகாது.அந்த மருந்து எந்த நோய்க்காக கொடுக்கப்பட்டதோ, அந்து நோய்க்கான நோய்க்கிருமிகளை கொல்லும் அதே வேளை வேறொரு நோயைக் கொடுக்கும் கிருமிகளை உற்பத்திச் செய்கின்றது.
இத்தொடரின் கடந்த பாகத்தில் குறிப்பிட்டது போல,நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம், தொடர்ச்சியாக ஒருவர் ஒன்றுமாறி ஒன்றாக மருந்தின் பக்க விளைவுகளால் நோயாளியாகவே இருப்பார்.
மக்களின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை உள்ள நாடுகள், நோயினால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கின்ற மருந்துகளுக்காக மற்றும் மருத்துவ உதவிகளுக்காகவும் பலகோடி பணத்தைச் செலவழிக்கின்றன.
இச்செலவானது ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக செம்மைப்டுத்தவோ அபிவிருத்திகளைச் செய்யவோ தடையாக இருக்கின்றது.மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுதான் ஒரு நாட்டின் செல்வம் என்ற கொள்கை சிதைவுறத் தொடங்குகிறது.
இது ஒரு நாட்டின் அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படையும் நிலையைத் தோற்றுவிக்கின்றது.வெறும் குளிகைதானே என பொதுப்பார்வைக்குத் தோன்றும் மருந்து உளவு நிறுவனங்களின் சதியால் மெல்லக் கொல்லும் விசத்தையே மக்கள் நோய்க்கான மருந்தாக உட்கொள்ளும் நிலை தோன்றுகின்றது.
ஒரு நாட்டைச் சிதைப்பதற்காக தற்செயலாக நடப்பது போல உளவு நிறுவனங்கள் போரைத் தோற்றுவித்தல், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடில்லை என்று பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துதல்,இயற்கையாக விலங்குகள்; பறவைகளிலிருந்து தோன்றியன என உயிர்க்கொல்லி கிருமிகளை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் செலுத்தி அவற்றின் இறைச்சிகளைச் சாப்பிடுவோருக்கு உயிர்க்கொல்லி கிருமிகளால் நோய்வாய்ப்படச் செய்து நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவச் செய்தல் என்ற சூழ்ச்சியைச் செய்கின்றன.
உலகநாடுகள் உலகைக் காப்பாற்ற வேண்டுமென்ற பகிரங்க புரிதல் இருப்பது போல வெளிகாட்டிக் கொண்டு அறிக்கை விடுவதும், ஒன்றுகூடி கலந்துரையாடுவதுமாக நிகழ்வுகள் நடைபெற்றாலும் ஒன்றையொன்று கண்காணித்துக் கொண்டே இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
உலகநாடுகளை சீரழிப்பதில் மிகப்பெரும் பங்கு வகிப்பது மக்கள் மத்தியில் பரவச் செய்யும் உயிர்க்கொல்லிக் கிருமிகளேயாகும்.
இக்கட்டுரைத் தொடரின் முக்கியமான பேசுபொருளாக,உயிர்க்கொல்லி கிருமி பற்றி அதிக கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
தனிமனிதனாகட்டும்,குடும்பமாகட்டும் மகிழ்ச்சியாகவே அனைவரும் வாழ விரும்புவார்கள்.
நாளாந்த வாழ்க்கைக்கான வருமானம் போதாத போதும், இருக்கிற வருவாயில் வாழப் பழகிக் கொள்பவர்கள் அதன் தாற்பரியம் அறிந்து இசைவாக்கம் பெற்று அதிலிருந்து மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைவார்கள்.
ஆனால் வறுமையுடன் வாழ்பவர்களாக இருந்தாலென்ன,தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற வசதியான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலென்ன நோயின் பிடியில் சிக்கிவிட்டால் அனைத்து மகிழ்ச்சிகளும் அவர்களிடமிருந்து விடுபட்டுப் போய்விடும்.
எனவேதான் ஒரு நாட்டைச் சீரழிப்பதற்கு இரசாயண ஆயுதங்களைவிட உயிர்க்கொல்லி ஆயுதங்களையே வல்லரசு நாடுகள் பாவிக்கத் தொடங்கியிருக்கின்றன.
குடும்ப மகிழ்ச்சி என்பது,ஒவ்வொரு குடும்பத்திலிருக்கும் தனித்தனி மனிதர்களின் மகிழ்ச்சியைக் கொண்டதே.எனவே தனிமனிதர்களின் அமைதியின்மையும் அதன் எதிரொலியாக அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களும் கருத்துக்களும் எழும் போது, சிறு பொறியாகத் தோன்றும் கண்டனத் தீ காட்டையே எரிக்கும் தீ போன்று அரசாங்கத்துக்கு எதிரான பலமான கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கும்.
அரசாங்கமொன்று தனது மக்களைக் காப்பாற்றுவதற்காக நோய்க்கிருமித் தொற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கையில்,எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் அரசு தனது கையாலாகத்தனத்தை காட்டிவிட்டது என்று கடுமையான கண்டனத்தை முன் வைப்பார்கள்.
ஒரு நாடு சந்திக்கும் பிரச்சினையை உற்று நோக்குபவர்கள்,ஊன்றிக் கவனிப்பவர்கள்,பிரச்சினைக்குரிய விடயத்தைப் பற்றித் தொடராகச் சிந்திக்கும் போது அதன் மூலவேர் எதுவென கண்டறிவார்கள்.
உளவு நிறுவனங்களின் ஒற்றர்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள்.வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக, பல்துறைசார் நிறுவனங்னகளில் பணிபுரிவர்களாக இவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள்.
குறிப்பாக மருந்துகளை இறக்குமதி செய்வோருக்குள் உளவு நிறுவன ஒற்றர்கள் ஊடுருவியிருக்க அதிக வாய்ப்புண்டு.
உடலிற்கு உதவி செய்யும் நல்ல கிருமிகளை, பாதிப்பேற்படுத்தும் கிருமிகளாக மாற்றக்கூடிய மருந்துகளை பரிந்;துரைப்பதற்காக மருந்தியல் சம்பந்தப்பட்ட அத்துறைசார்ந்தவர்களுடன் மருந்துக்களை இறக்குமதி செய்வோர் கலந்துரையாடி
தாம் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள்.மருந்துகளை அறிமுகம் செய்யும் முகவர்கள் மருத்துவர்களை அணுகி பரிந்துரைக்கும் மருந்துகளில் சேர்க்கபட்டுள்ள மூலகங்களில் காணப்படும் சிறு வித்தியாசங்கள்கூட உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் அறியாதவராக மருந்துவர் இருந்த போதும்,வேறுவழியின்றி அவரும் அம்மருந்துகளை தனது நோயாளிகளுக்கு பருந்துரைக்கிறார்.என்னென்ன மருந்துகள் எந்தெந்த நோய்க்கு எழுதப்பட வேண்டும் என்பதை,மருத்தவர்களைச் சந்திக்கும் முகவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மருந்துக் கடைகளுக்கு முகவர்களால் விற்பனை செய்யப்பட்டிருக்கும் மருந்துகளையே மருத்துவர்களும் எழுதுவார்கள்.
இத்தகு சூழலில் மக்களை பாதிக்காத மருந்து எது நல்ல மருந்து எது என்பதை உளசுத்தியுடன் கண்டறிவதற்காக அரசாங்கங்கள் மிகக் கவனமாகவிருக்கின்றன.
மருந்து உறபத்தி செய்வோரிலிருந்து பல தொடர்புகளைக் கடந்து ஒரு நாட்டிற்குள் மருந்துகள் வந்தடையும் வரை, தவறான மருந்துகளை பரிந்துரைப்பதற்காக இக்கட்டுரையில் ஆரம்பகத்தில் குறிப்பிட்டது போல பணம்,பெண், பொருள் இலஞ்சமாகக் கொடுக்கப்படுகின்றது.
நோய் தீர்க்கும் மருந்து என்பது அறம் சார்ந்த செயலாகும்.ஆனால் இன்று அது மனிதர்களின் உயிரை விலைபேசும் வணிகமாக மாறிவிட்டது.
உளவு நிறுவனங்கள் பலவாண்டுகளாக நோய்க்கிருமித் தொற்றை ஏற்படுத்தி வருகின்றமையை பொதுமக்களால் அறிந்து கொள்ள முடியாத நிலையிலிருந்து இன்று பரவலாக அதுபற்றி அறிந்து கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.
(தொடரும்)
![]()