சங்கதிகள்
இறக்காமம் மண் மறக்கமுடியாத ஒருவராக ஊடகவியலாளர் பிக்கீர் வாழ்ந்து மறைந்துள்ளார் : அல்- மீஸான் பௌண்டஷன்.
இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த பிரதி அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எல்.எம். பிக்கீர் ஆசிரியர் இன்று (21) காலமானார் எனும் செய்தி மிகப்பெரிய துயரத்தை உண்டாக்கியுள்ளது. இறக்காமத்தின் முதுசமாகவும், முதன்மை ஊடகவியலாளராகவும் போற்றப்படும் அன்னார் தமிழ்மொழி தேர்ச்சி கொண்டவராகவும், ஆய்வாளர் மற்றும் எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். இறக்காமத்தின் சகல அபிவிருத்தி வேலைகளிலும் தன்னை அர்ப்பணித்த ஒரு சமூக சேவகர் இன்று காலமாகியுள்ளார் என அல்- மீஸான் பௌண்டஷன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அனுதாப செய்தியில் மேலும், மக்களினால் நன்றாக அறியப்பட்ட கலைஞர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.எம். பிக்கீர் அவர்கள் இறக்காமத்துக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என குரல் கொடுத்தவர். மட்டுமின்றி இறக்காமத்தின் ஊடகங்கள் அதே போல் இலக்கியத்துறை வளர்வதற்கு தன்னை அர்ப்பணித்தவர். இறக்காம பிராந்திய வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த இலக்கியவாதி எஸ்.எல்.எம். பிக்கீர் ஆசிரியர் காலமான செய்தி மிகப்பெரும் வெற்றிடத்தை உண்டாக்கியுள்ளது. அன்னாரின் இழப்பினால் கவலையடைந்த குடும்பத்தினர், அவரது நண்பர்கள், ஊடகத்துறையினர் எல்லோருக்கும் எங்களின் ஆறுதல்களை தெரிவித்து கொள்கின்றோம். அவரின் நிறைந்த நல்லமல்களை ஏற்று உயரிய சுவர்க்கம் கிடைக்க இறைவனிடம் பிராத்திக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.