சங்கதிகள்

இலங்கையில் குழந்தைகளின் மருத்துவ தேவைக்கு உதவும் கலை நிகழ்ச்சி!

மெல்பனில் இம்மாதம் 19 ஆம் திகதி மூவின மக்களும் இணையும் ஒன்றுகூடல்

ஆஸ்திரேலியா மெல்பனில் வதியும் இலங்கையைச் சேர்ந்த மூவினத்தவர்களும் இணைந்து, தமது தாயகத்தில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மருத்துவ ரீதியாக உதவ முன்வந்துள்ளனர்.

முன்னர் நீடித்த கொவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் இங்கிருக்கும் இலங்கையர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊடாக பல்வேறு உதவிகளை வழங்கினர்.

இம்மாதம் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெல்பனில் கிளேய்டன் சமூக மண்டபத்தில் இரவு 7-30 மணி முதல் 11-30 மணிவரையில் நடைபெறவிருக்கும் ஒன்றுகூடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கையில் குழந்தைகளின் மருத்துவ தேவைக்கான உபகரணங்கள், கருவிகள் ஆகியனவற்றை பெற்றுக்கொள்வதற்கு ரோட்டரிக் கழகம் ஊடாக வழங்கப்படவிருக்கிறது.

எதிர்காலக் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட மூவினத்தவர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளனர்.

விக்ரோரியா மாநில இலங்கைக்கான துணைத்தூதுவர் திரு. கித்சிறி கேரத், மற்றும் கிறீன் கட்சியின் பிரதிநிதியும் எம். பி.யுமான திருமதி சமந்தா ரட்ணம், மாநில எம். பி.க்கள் பல்லின கலாசார ஆணையாளர் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுவர்.

மேலதிக விபரங்களுக்கு :

மங்கல – 0412 286 640

சித்தி – 0433 325 798

ஶ்ரீகௌரிசங்கர் – 0421 869 644 www.saveadream.org.au / info.saveadream.org.au

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.