அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல் சிலாப்பில் சிக்கி தவித்த நாய்; தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சத்தியமங்கலம் அருகே உள்ளது டி.என்.பாளையம். இங்குள்ள பெட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள மாடிப்படி வழியாக தெருநாய் ஒன்று நேற்று சென்று உள்ளது. 2-வது மாடிக்கு சென்ற அந்த நாய் அங்குள்ள ஜன்னல் சிலாப்பில் இறங்கி உள்ளது.

ஆனால் மீண்டும் அந்த நாயால் மாடிக்கு ஏறவும் முடியாமல் சிலாப்பில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் சிக்கி தவித்தது. மேலும் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் நடந்தபடி முனங்க தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாய் குரைக்க தொடங்கியது.

இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜன்னல் சிலாப்பில் தவித்த நாயை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே அவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜன்னல் சிலாப்பில் சிக்கி தவித்த நாயை லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாய் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *