சங்கமம்

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசையான இன்று (ஜூலை 28) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆடி அமாவாசை தினமான இன்று ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆறு, மதுரை வைகை ஆறு, ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை, காவிரி ஆறு பாயும் சேலம், திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *