சங்கமம்

மும்பை கோவிலுக்கு தமிழக பக்தர் ரூ.10 கோடி தங்க தகடு

மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு தமிழக பக்தர் , ரூ.10 கோடி மதிப்பிலான தங்க தகடை கோபுரத்திற்கு காணிக்கையாக வழங்கவுள்ளார். கோவையை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த 2008 ல் மும்பை தாக்குதலின்போது வெளி நாடு செல்ல முடியாமல் இங்கு சில நாட்கள் தங்கி இருந்தார். இந்நேரத்தில் மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சில வேண்டுதலை வைத்தார். ஒமனுக்கு பத்திரமாக செல்ல வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியது. தற்போது அவர் பல கோடிக்கணக்கிலான தொழில் செய்து வருகிறார்.

இதனையடுத்து இந்தியா வந்த அவர் கோவில் நிர்வாகத்திடம் கோபுரத்திற்கு தங்க தகடு செய்து தர தன்னை அனுமதிக்குமாறு கேட்டார். கோவில் ஒப்புதல் கிடைத்ததால் ரூ. 10 கோடி செலவில் கோவில் கோபுரத்திற்கு தங்க தகடு செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். இத்தகவலை கோவில் சேர்மன் ராமநாத் ஷா கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *