கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்…. தடுக்க வந்த வனத்துறைக்கு கத்தியை காட்டி மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர்கள் கைது!!
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் கந்தசாமி, உள்ளிட்ட மூவரும் முன்னாள் ராணுவத்தினர்.
இவர்களது நண்பரான ஏழுமலையை சேர்ந்த சரவணன், திருப்பரங்குன்றம் வடிவேலு உள்ளிட்ட 5 பேரும் கும்பக்கரை அருவியில் மதுபோதையில் குளித்த போது அங்கு பெண்களிடம் தகாத முறையில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததால் பெண்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி பிடித்த போது போதை ஆசாமி ஒருவர் அவர்கள் வந்த காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வனத்துறையினரை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் சூழ்ந்துகொண்டு அவர்களிடம் இருந்த கத்தியை எப்படியும் மடக்கிப் பிடித்து கத்தியை பிடுங்கி அசம்பாவிதங்களை தவிர்த்து உள்ளனர்.
இது தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வந்து மது போதையில் கீழே விழுந்து மண்டை உடைந்த போதை ஆசாமி ஒருவர் வந்திருந்த காவலர்களையும், வனத்துறையினரையும், தகாத வார்த்தைகளால் திட்டி காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வர மறுத்து அங்கேயே இரண்டு மணி நேரமாக போதை ஆசாமிகள் சுற்றுலா பயணிகளையும் அங்கு சுற்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு 108 வாகனம் வரவழைக்கப்பட்டு இந்த போதை ஆசாமிகள் 108 வாகனத்தில் ஏற மறுத்து மேலும் ஒரு மணி நேரம் அதே பகுதியில் சாலையில் படுத்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மேலும் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு போதை ஆசாமிகள் நால்வரையும் 108 வாகனத்தில் வந்து காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீதமுள்ள நான்கு வரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வனக்காவலரை கத்தியால் தாக்க முற்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த மது போதை ஆசாமிகளால் கும்பக்கரை அருவியில் மூன்று மணி நேரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர். இதில் மூவர் முன்னாள் ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.