ஸ்பெயினில் பார்வையாளர்களை கவர்ந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி
ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன. பிரபலமான டெக்கெல்ஸ் இன நாய்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் சுறுசுறுப்பாக பங்கேற்று அசத்தியது. அழகிய நாய்கள், எஜமானர்களுக்கு கட்டுப்படும் நாய்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒரே இடத்தில் பல வகையான கண்ணை கவரும் நாய்களையும், அவைகள் துருதுருவென போட்டியில் கலந்து கொண்டதையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். இந்த போட்டியில் பெரிய அளவில் முடி இல்லாத சில நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாயை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். போட்டியில் பங்கேற்று அசத்திய நாய்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. சுமார் 15 ஆயிரம் நாய்கள் பங்கேற்றன. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடத்தப்பட்டது.