பலதும் பத்தும்

எலான் மஸ்க்கின் பெயர் தேவையில்லை – பெயர் மாற்றம் கோரும் திருநங்கை மகள்

டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்கின் மகள் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க். திருநங்கையான இவர் தந்தை எலான் மஸ்க் உடனான உறவை முறித்துக் கொண்டபின் அவரது அடையாளம் பெயரில் கூட தொடரக்கூடாது என கருதி, தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதிக்குமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இவரது தாயான ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சனை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். மஸ்க் உடனான திருமண பந்தம் கசக்கவே, 2008இல் மஸ்க்கை விவாகரத்து செய்தார் ஜெனிஃபர். இவர்கள் இருவருக்கும் பிறந்த 5 குழந்தைகளில் சேவியர் அலெக்ஸாண்டரும் ஒருவர். ஆணாக பிறந்த இவர், பதின்ம வயதை எட்டியவுடன் திருநங்கையாக மாறினார். தன் தாயின் பெயரை இணைத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் “விவியன் ஜென்னா வில்சன்” எனப் பெயரை மாற்றினார்.

அதே பெயரை தனது புதிய பாலின அடையாளத்திற்கு ஏற்ப பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் மாற்றி தருமாறு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். எலான் மஸ்க்கிற்கும் அவரது மகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் குறித்து விளக்கம் எதுவும் இல்லை. இருப்பினும் தனது தந்தை எலான் மஸ்க் சார்ந்த எந்த விஷயமும் பெயரளவில் கூட தன்னை பின் தொடரக் கூடாது என கூறியுள்ளார் விவியன் ஜென்னா வில்சன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.