50 ஆண்டுகளாக Burger சாப்பிட்டு உலகச் சாதனை…

அமெரிக்காவில் ஒருவர் கடந்த 50 ஆண்டுகளாக BigMac பர்கர் சாப்பிட்டு உலகச் சாதனை புரிந்துள்ளார்.

அவர் இதுவரை சாப்பிட்ட பர்கர்களின் எண்ணிக்கை 32,340.

1972 ஆம் ஆண்டு மே மாதம் பர்கர் சாப்பிடத் தொடங்கிய டான் கோர்ஸ்கே (Don Gorske) தற்போது தினசரி பர்கர் சாப்பிடுவதில் தனது 50ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.

ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு அவர் ஒன்பது பர்கர்கள் வரை சாப்பிடுவாராம்.

இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு வாழ்நாளில் அதிக BigMac பர்கர்களை சாப்பிட்டவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட பர்கரின் எண்ணிக்கை 15,490.

திரு கோர்ஸ்கே பர்கர் சாப்பிடுவதை மிக முக்கியமாகக் கருதுகிறார். சாப்பிட்ட பிறகு அதற்கான கட்டணப்பட்டியலை ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருக்கிறார். தினமும் அவர் வாங்கும்போது தனது தினசரி நாட்காட்டியில் குறித்தும் வைத்திருக்கிறார்.

50 வருடங்களில் அவர் பர்கர் சாப்பிடாமல் இருந்தது 8 நாட்கள் மட்டுமே!

30,000 க்கும் மேற்பட்ட பர்கர்களை சாப்பிட்ட பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஒரு நாளைக்குச் சுமார் 10 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்வதாகவும் கோர்ஸ்கே கூறுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *