உலகின் ஆக நீளமான தொங்கு நடைப்பாலம் செக் குடியரசில் திறக்கப்பட்டது

உலகின் ஆக நீளமான தொங்கு நடைப்பாலம் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் (13 மே) செக் குடியரசில் (Czech Republic) திறக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கட்டப்பட்டு வரும் தொங்குபாலத்தின் மொத்த நீளம் 721 மீட்டர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,116 மீட்டர் உயரத்திலும் தரையிலிருந்து சுமார் 95 மீட்டர் உயரத்திலும் தொங்குகிறது பாலம்.

இதற்கு ‘Sky Bridge 721’ என்று பெயரிட்டுள்ளனர்.

சுமார் 1.2 மீட்டர் நடைபாதை அகலம் கொண்ட Skybridge 721-ல் அனைத்து வயது, உயரம் கொண்ட குழந்தைகளும் செல்லலாம்.

தள்ளுவண்டியிலும் சக்கர நாற்காலியிலும் உள்ளவர்களுக்கு இது ஏற்றதல்ல.

பயணிகளுக்கான கட்டணம் சுமார் 14.60 வெள்ளி.

ஜெசெனிக்கி மலைகளின் கண்கவர் காட்சிகளையும் காடுகளையும் திகில் உணர்வுடன் பயணிகள் ரசிக்கலாம்.

Sky Bridge 721 புதிய உலகச் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு கின்னஸ் சாதனை படைத்த தொங்குபாலத்தைவிட சுமார் இது 154 மீட்டர் அதிக நீளம் கொண்டது.

இதற்கு முன்பு உலகச் சாதனை படைத்த பாக்லங் பர்பத் (Baglung Parbat) தொங்கு பாலம் நேப்பாளத்தில் உள்ளது. அது சுமார் 567 மீட்டர் நீளம் கொண்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *