கோல்ஃப் பந்தைவிடப் பெரிய வெள்ளை வைரம்- தலையைச் சுற்றும் விலை
பேரிக்காய் வடிவிலான வைரம்…..கோல்ஃப் பந்தை விடச் சற்று பெரியது.
உலகில் இதுவரை ஏலம் விடப்பட்டதில் ஆகப் பெரிய வெள்ளை வைரம்.
மதிப்பு?
20 மில்லியன் டாலருக்கும் 30 மில்லியன் டாலருக்கும் இடையில்.
‘The Rock’ என்று அழைக்கப்படும் அந்த வைரக்கல் 228.31 கேரட் எடை கொண்டுள்ளது.
அது ஜெனிவாவில் (Geneva) அடுத்த புதன்கிழமை (11 மே)ஏலத்தில் விடப்படும் என ஏல நிறுவனமான Christie’s தெரிவித்தது.
விலை?
30 மில்லியன் டாலருக்கும் (சுமார் 41.6 மில்லியன் வெள்ளி)அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வைரக்கல்லின் ஏலத்தொகை சாதனை கூட படைக்கலாம் என்று கூறப்படுகிறது.
‘The Rock’, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் உள்ள
சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அது தற்போது வட அமெரிக்காவில் பெயர் குறிப்பிடாத ஒருவரிடம் இருக்கிறது.
![]()